2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பஸ்கள் மோதல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                

அநுராதபுரம் தஹய்யாகம சந்தியில்  நான்கு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று பலத்த சேதத்திற்குள்ளாகியது. இந்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

நாச்சியாதீவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், தஹய்யாகம சந்திக்கு அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்களை முந்துவதற்கு எத்தனித்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக அநுராதபுரம் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின்போது பயணிகள் எவருக்கும்  காயம் ஏற்படவில்லை. தலாவ, கல்நேவ மற்றும் நாச்சியாதீவு பகுதிகளிலிருந்து பயணித்த பஸ்களே விபத்திற்குள்ளாகின.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X