2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் அவசர அம்புலன்ஸ் சேவை

Super User   / 2011 ஏப்ரல் 23 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்திற்கான அவசர 'அம்புலான்ஸ் 'சேவையோன்று எதிர்வரும் திங்கட்கிழமை (முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி.யயூட் ரதனி தெரிவித்தார்.

வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியினட் ஆலோசனைக்கமைவாகவும், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  ஆர்.ரவீந்திரனின் தலைமைத்துவத்தில் மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மேற்படி சேவை மன்னார் மாவட்டம் முழுவதும் இடம் பெறும்.குறித்த  மன்னார் மாவட்டத்தின் எப்பகுதியில் இருந்தும் '110'என்ற இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் மேற்படி சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன், மற்றும் கௌரவ விருந்தினர்களக நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், வடமாகாண  சுகாதார அமைச்சின் செயலாளர்  ஆர்.ரவீந்திரன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மோகநாதன், அவசர மருத்துவ சேவைகள் அமைப்பின் இலங்கைக்கான  பணிப்பாளர் ஜெப் பெர்னொட், தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிகேடியப் மைத்திரி டயஸ், வடமாகாண கடற்படை கொமான்டர் றியல் அட்மிரல் எ.ஆர்.அமரசிங்க மற்றும் மன்னார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஏ.ஆனந்த சமரக்கோன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X