2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளை வானில் மாணவனை கடத்த முற்பட்ட முயற்சி தோல்வி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

இலக்கத்தகடு இல்லாத வெள்ளைநிற வானொன்றில்  வந்த சிலர் பாடசாலை மாணவன் ஒருவனைக் கடத்த முயன்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை லுணுவில் பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தரம் ௰இல்  கல்வி கற்கும் மாணவன் ஒருவனையே வெள்ளைநிற வானில் வந்தவர்கள் கடத்த முயன்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நேற்றையதினம் பாடசாலை புத்தகப்பையுடன் கினிகல்பொல சந்தியடியில் தான் சென்றுகொண்டிருந்தபோது சனநடமாட்டம் இல்லாத பாதை நடுவில் நிறுத்தப்பட்டிருந்த வானிலிருந்து இறங்கிய இருவர்  தன்னை கடத்த முயன்றதாகவும் அவர்கள் தங்களது முகங்களை துணியால் மறைத்திருந்ததாகவும் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டில் அம்மாணவன் தெரிவித்துள்ளான்;. அத்துடன், மேலும் மூவர் வானினுள் இருந்ததாகவும் அம்மாணவன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளான்.

தனது சைக்கிளை நிறுத்தி தன்னை வானினுள் ஏற்ற முயன்றபோது தப்பியோடியதாகவும் அம்மாணவன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளான்.
 
கப்பம் பெறுவதற்காக இந்த மாணவனை கடத்த முற்பட்டார்களா அல்லது ஏனைய காரணங்களை முன்னிட்டு கடத்த முற்பட்டார்களா  என்பது தொடர்பில் விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.  

இம்மாணவன் வென்னப்புவ பிரதேச ஊடகவியலாளர் ஒருவரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X