2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் இலவச கண் சத்திர சிகிச்சை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

முஸ்லிம் இளைஞர் ஒன்றியத்தின் சயிலான் அமைப்பினால் இன்று புத்தளம், குவைத் வைத்தியசாலையில் 12ஆவது கண் சத்திர சிகிச்சை முகாம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இம்முகாமில் புத்தளம் உட்பட யாழ்ப்பாணத்திலிருந்தும், ஏனைய பிரதேசங்களிலிருந்தும் நோயாளர்கள் இலவசமாக இவ்வைத்தியசாலைக்கு பஸ் மூலம் அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தங்கவைத்து சாப்பாடும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

அல் பஸர் சர்வதேச அமைப்பு இதற்கான நிதியுதவினை வழங்கியுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் தாஹிர், மற்றும் முஸ்லிம் இளைஞர் ஒன்றியத்தின் சயிலான் அமைப்பின் பணிப்பாளர் சபர் சாலி, அல் பஸர் சர்வதேச அமைப்பின் பிரதிநிதி டாக்டர். ஆரிப் ஸா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X