2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் வர்த்தக சம்மேளனம் அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரத்தில் மிக நீண்ட காலத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை மாலை வர்த்தக சம்மேளனமொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகரசபைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும், புத்தளம் நகர வர்த்தகர்கள் பெருந்திரளானோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வர்த்தக சங்கத்தின் தலைவராக எம்.எஸ்.எம்.யாஸிர், உபதலைவர்களாக முகம்மது ரிஸ்வி, யோகேஸ்வரன், எஸ்.எம்.சமரகோன், செயலாளராக ஏ.எச்.எம்.சபீல் ஆகியோர்களுடன் 11பேர் கொண்ட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருக்கும் வர்த்தக சங்கம் புத்தளம் நகரசபையுடன் இணைந்து புத்தளத்தில் உள்ள வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், புத்தளம் நகர பொருளாதாரத்தை விருத்தி செய்யும்  நடவடிக்கைளிலும் ஈடுபடவுள்ளதாகவும் அதற்கு அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வர்த்தக சங்கத் தலைவர் இதன் போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X