2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் அரசினர் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் அரசினர் வைத்தியசாலையில் நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமேல் மாகாண சபை சுகாதார அமைச்சர் அசோக வடிகமங்காவிடம், வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ். ஏ.எஹ்யா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது.   சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வெளியே பெற்றுக்கொள்ளுமாறு   கேட்கப்படுகின்றனர்.  இதனால் அரசினர் வைத்தியசாலைக்கு   செல்லும் சாதாரண மக்கள்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  

புத்தளம் வைத்தியசாலைக்கு போதுமான மருந்துகளை  வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு  அவர்   வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X