Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 02 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.சபூர்தீன்)
நிர்க்கதிகுள்ளாகும் யானைக் குட்டிகள் மற்றும் குழப்பங்களில் ஈடுபடும் யானைகளை தடுத்து நிறுத்துவதற்காக புதிதாக சரணாலயங்களை அமைக்க வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானை, பொலன்னறுவை மாவட்டத்தில் மாதுருஓயா, மற்றும் தென் பகுதியில் வெரகல பிரதேசத்திலும் தலா ஒவ்வொரு தடுப்பு சரணாலயங்களை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கமநல சேவைகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
3000 ஏக்கர் நிலப்பரப்பில் ஒவ்வொரு தடுப்பு சரணாலயமும் அமையப்பெறவுள்ளதோடு அயல் கிராமங்களுக்கு யானைகள் செல்லாதிருப்பதற்காக பலமான பாதுகாப்பு வேலியும் அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை தடுப்பு சரணாலயங்களுக்கு அருகில் 1000 ஏக்கரில் யானைகளுக்குத் தேவையான உணவுத் தாவரங்களை நடவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
32 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago