2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கல்வி அமைச்சருடன் புத்தளம் நகரசபைத் தலைவர் சந்திப்பு

Kogilavani   / 2011 மே 05 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து புத்தளம் மாவட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குரை உள்ளிட்ட ஏனைய குறைபாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதியினால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட 1000 பாடசாலைகள் விசேட திட்டத்திற்குள் புத்தளத்திலுள்ள கற்பிட்டி அல்/அக்ஷா தேசியப்பாடசாலை, புத்தளம் சாஹிரா தேசியப்பாடசாலைகள் என்பன உள்வாங்கப்படாமை குறித்தும் இவர்கள் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன் புத்தளம் நகரிலுள்ள ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்து கொடுப்பதற்கு நவடிக்கை எடுப்பதுடன், புத்தளம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஏனைய பற்றாக்குறைகளையும் நிவர்;த்தி செய்து கொடுக்குமாறு கே.ஏ.பாயிஸ் தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது, 1000 பாடசாலைகள் திட்டத்திற்குள் உள்வாங்கப்படாதிருக்கும் இரு தேசியப் பாடசாலைகளையும் உள்ங்வாங்குவதாக தெரிவித்த கல்வி அமைச்சர், ஜனாதிபதி விஞ்ஞானக்கல்லூரியில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன், புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஏனைய பற்றாக் குறைகளையும் விரைவில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளதாக புத்தளம் நகர சபையின் பேச்சாளரும், நகர சபைத் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வடமேல் மாகாணசபை உறுபப்பினர் என்.டி.எம்.தாஹிர், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் தாரிக், கற்பிட்டி அல்/ அக்ஷா தேசியப்பாடசாலையின் பிரதி அதபர் எம்.முத்தலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X