2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரியவகை பறவைகளை கடத்திச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் முந்தலில் கைது

Menaka Mookandi   / 2011 மே 06 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றின் மூலம் அரியவகை பறவையினங்களைக் கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பறவைகளையும் தப்போவ சரணாலயத்தில் விடுவித்துள்ளனர்.

15 பறவை இனங்களைச் சேர்ந்த 158 அரியவகை பறவையினங்களையே இவ்வாறு கடத்திச் செல்ல முற்பட்ட போது முந்தல் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு முந்தல் பிரதேசத்தினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிஸார் அதனை சோதனையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த அரியவகை பறவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.

இந்நிலையில் முச்சக்கரவண்டி ஓட்டுனரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணகளுக்கு உட்படுத்திய பொலிஸார் சந்தேகநபரையும் பறவைகளையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதனையடுத்து குறித்த பறவைகளை உடனடியாக தப்போவ சரணாலயத்தில் விடுவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட புத்தளம் நீதிவான் சேசிறி ஹேரத், தானும் குறித்த சரணாலயத்துக்கு பொலிஸாருடன் நேரடியாகச் சென்று பறவைகளை விடுவித்தார்.

அத்துடன் வனாத்தவில்லுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X