2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டியில் நடமாடும் வைத்திய சேவை

Menaka Mookandi   / 2011 மே 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான செரண்டிப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்பிட்டி பள்ளிவாசல்துறையில் நடமாடும் வைத்திய சேவையொன்று இடம்பெற்றறு.

சார்ஜா செரட்டி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் அணுசரனையில் இடம்பெற்ற இவ்வைத்திய முகாமில் இரத்தப்பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.

இந்த வைத்திய முகாமில் 4 வைத்தியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், 500இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு மருத்துவ தேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான செரண்டிப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த 8ஆம் திகதி நிகவெரட்டிய நம்முவாவ பகுதியிலும் குறித்த இலவச நடமாடும் வைத்திய முகாமொன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X