2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சுகாதாரமற்ற உணவகங்களுக்கு ஒருமாத அவகாசம்

Kogilavani   / 2011 மே 10 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                                   

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் மற்றும் சிற்றூண்டிச் சாலைகளில் 80 வீதமானவை திருப்திகரமான சுகாதார நிலையில் இல்லை என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும்  சோதனைகளின்  மூலம்  இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார சேவை அலுவலகத்தின் அநுராதபுரம் பிரிவு  உணவு  மற்றும் மூலிகைப் பொருட்களின் பரிசோதகர் ஆனந்த வீரகொட தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள உணவகங்களில் 20 வீதமானவை சிறந்த முறையில் உள்ளதாகவும் 80 வீதமானவை திருப்திகரமான முறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

திருப்தியற்ற நிலையில் காணப்படும் உணவகங்கள், சிற்றூண்டிச்சாலைகள், வெதுப்பகங்களின் தவறுகளைத்  திருத்திக் கொள்ள ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X