2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவிப்பு

Menaka Mookandi   / 2011 மே 13 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற 22 முஸ்லிம் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் மாவட்ட கிளையினால் இன்று  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரியில் நடத்தப்பட்டது.
 
புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அப்துல்லா மஹ்முத் ஆலிம் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் உலமாக்கள் பலரும், மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X