2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கும்புட்டான்குளம் பொலிஸார்மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

A.P.Mathan   / 2011 மே 23 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

 

ஹலாவத்தை, பங்கதெனிய- கும்புட்டான்குளம் பொலிஸார் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலில் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயங்களுக்கு உள்ளாகி ஹலாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது...

இன்று அதிகாலை 12 மணியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை மடக்கிப் பிடிப்பதற்காக குறித்த பகுதிக்கு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது. பொலிஸார் வருவதனை அவதானித்த சட்டவிரோத குழு அவர்கள்மீது ஊராரின் உதவியுடன் சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த பொலிஸ் குழுவே ஹலாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக ஹலாவத்தை வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X