2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எதிர்வரும் வரட்சி காலநிலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது:அமைச்சர் அமரவீர

Menaka Mookandi   / 2011 மே 26 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

எதிர்காலத்தில் பாரியதொரு வரட்சி காலநிலையை நாடு எதிர்நோக்கவுள்ளது. அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்களுக்கு நீர் விநியோக இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வொன்று இன்று காலை புத்தளத்தில் இடம்பெற்றது. இதன்போது, சுமார் 18 இலட்சம் பெறுமதியான 13 நீர் விநியோக இயந்திரங்களை அமைச்சர் வழங்கிவைத்தார்.

இதனையடுத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 'அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்னர் உதவி செய்வதற்காக மட்டுமே அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுக்காது.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னரே அவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை வழங்கவே அமைச்சு செயற்படுகிறது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X