2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் அநுராதபுர ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 மே 30 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து  புத்தளம் அநுராதபுர வீதியின் 17ஆம் கட்டை அளுத்கம சந்தியில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

அளுத்கம பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமிய வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை பெற்றுத் தருமாறும்இ துட்டகெமுனு  பாடசாலைக்குத் தேவையான ஆசிரியர்களைப் பெற்றுத் தருமாறும்இ அளுத்கமையிலிருந்து  வீரபுரஇ கும்புக்கல்லஇ மெதகமஇ புளியங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு செல்லக் கூடிய பாதைகளை புனர்நிர்மாணம் செய்து தருமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அளுத்கம விகாரை பௌத்த குருஇ பாடசாலையின் பெற்றோர்இ பொதுமக்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொணட்னர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X