2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் இருவர் பலி

Suganthini Ratnam   / 2011 மே 31 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  இடம்பெற்ற வெவ்வேறு மூன்று வாகன விபத்துக்களில் இருவர்  பலியாகியுள்ளதுடன்,  மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவங்கள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளன.

சிலாபம் மைக்குளம் பிரதேசத்தில்  பயணித்த  ஒருவரின் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சென்றவரின் தலையில் பலத்த காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதேவேளை,  ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.  மீன் ஏற்றிச்சென்ற லொறியுடன் தனியார் பஸ்ஸொன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டது. இதில்  லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன்,  லொறியின் உதவியாளர் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பங்கதெனிய பள்ளம வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளொன்றும் சைக்கிளொன்றும்  மோதியதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X