2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் நகரில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை

Kogilavani   / 2011 ஜூன் 02 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் நகரில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள்     அனைத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர ஆணையாளர் சம்பத் ரோஹன தெரிவித்தார்.

இதன்படி பழைய பஸ் தரிப்பிடம், சந்தை பகுதி, புதிய நகரம், தஹய்யாகம சந்தி ஆகிய வீதிகளிலுள்ள  சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றம் பெயர் பலகைகளும் அகற்றப்பட்டுள்ளன.

இதேவேளை அடுத்த வாரத்தினுள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை,  12 கடைத் தொகுதி    பகுதிகளிலுள்ள சகல சட்ட விரோதக் கட்டிடங்களும் அகற்றப்படவுள்ளன.

அநுராதபுரம் நகரத்தை அழகு படுத்துதல், பொது மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கிலேயே இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X