2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இரசாயனத் திரவங்கள் நீரில் கலப்பதால் பரவும் சிறுநீரக நோய்

Kogilavani   / 2011 ஜூன் 02 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

ராஜரட்ட பகுதியில் தீவிரமாகப் பரவி வரும் சிறுநீரக நோய்க்கான  ஒரு காரணம் களை நாசினி,  கிருமி நாசினி ஆகிய இரசாயன திரவங்களின் விசம் நீரில் கலப்பதாகும் என பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு வருட காலமாக சிறுநீரக நோய்க்கான காரணம் பற்றிய ஆய்வினை ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களும் களனிப் பல்கலைக்கழக பேராசியர்களும் மேற்கொண்டிருந்தனர்.

களை நாசினி   மற்றும் கிருமி நாசினி ஆகிய இரசாயன திரவங்களின் விசம் நீரில் கலப்பதினாலும் அவைகளின் கடுமையான நச்சுத் தன்மைகளை நெற்கதிர்கள் உறிஞ்சிக் கொள்வதனால் அதன் மூலம் சிறுநீரக நோயின் தாக்கம் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் விவசாயப் பிராந்தியமான ரஜரட்ட பகுதியில் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X