2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மணல் அகழ்வுக்கு எதிராக சேரக்குளி கிராமவாசிகள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 03 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், சேரக்குளிய கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக அக்கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி வருகின்றன.

அரச நிறுவனமொன்றைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரே குறித்த கிராமத்தில் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கின்ற கிராம மக்கள் இதனால் தங்களது கிராமம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

கரையோரப் பிரதேசமான குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு நீண்ட காலமாக முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தில் ஆழமான குழிகளைத் தோண்டி அவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் நீரினைச் சேகரித்தே இவர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்கிராமத்தில் மணல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் நிலத்தில் பிரிதொரு இரசாயனமொன்றை தெளிப்பதால் அது ஊற்று நீரில் கலந்துவிடுகிறது.

இதனால் ஊற்று நீர் இரசாயனம் கலந்த நிறம் மாறிய நீராகக் காணப்படுகின்றது. இதனால் ஊற்று நீரை நம்பியிருந்த கிராமவாசிகள் பாரியதொரு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனையடுத்து மேற்படி மணல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமவாசிகள் மணல் அகழ்வதற்காக அப்பகுதிக்குச் சென்றவர்களையும் விரட்டியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X