2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் சுயதொழில், மொழி சம்பந்தமான பயிற்சிநெறிகள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 06 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                               

அநுராதபுரம் மாவட்டத்தில் இயங்கும் சமூக நம்பிக்கை நிதியம், சுயதொழில் முயற்சி மற்றும் மொழி சம்பந்தமான பயிற்சிகளை வழங்கவுள்ளதாக அமைப்பின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளர் எம்.சீ.கிலாப்தீன் தெரிவித்தார்.

இப்பலோகம, பளுகஸ்வௌ, கெக்கிராவ, கல்நேவ, நாச்சியாதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாடசாலையை விட்டு இடை விலகியவர்கள், பெண்கள் ஆகியோருக்கு கைத்தொழில் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு சிங்கள மொழியும் கற்பிக்கப்படவுள்ளது.

மொழிப்பயிற்சிகள் யாவும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X