2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

செம்மாந்தளுவ கிராமத்திற்கு மின்சாரம்

A.P.Mathan   / 2011 ஜூன் 07 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட செம்மாந்தளுவ கிராமத்திற்கு சுமார் 50 வருடங்களின் பின்னர் புதிய மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக இக்கிராமத்திற்கு மின்சார வசதியில்லாமல் கிராம மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இக்கிராமத்திற்கு மின்சார வசதியை செய்து கொடுக்குமாறு பல அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கைகள் முன்வைத்த போதிலும் இது தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்கை கடைப்பிடித்து வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸிடம் இது குறித்து தெரியப்படுத்தியதும் இக்கிராம மக்களின் தேவையை உணர்ந்த நகர சபைத் தலைவர் பாயிஸ் இது தொடர்பாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் இக்கிராமத்திற்கு புதிய மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

புத்தளம் செம்மாந்தளுவ கிராமத்தின் புதிய மின் இணைப்புக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 35 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதுடன் மின்சார இணைப்பு மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0

  • Ibrahim Nihrir Thursday, 09 June 2011 12:03 AM

    ஒரு நகர சபை தலைவரின் சக்திக்கும் அப்பாற்பட்ட முறையில் கே.ஏ.பாயிஸ் சாதிக்கும் விஷயங்களை, நிச்சயம் புத்தளம் வாழ் சமூகம் பல காலத்துக்கு நினைவில் வைத்திருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X