Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 13 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
சிலாபம் பிரதேச மகளிர் பாடசாலை ஒன்றின் மாணவிகள் இருவர் கொழும்பு காலி முகத்திடலில் நின்றிருந்த போது அவர்களை அழைத்துச் சென்று கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதான மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவிகள் இருவருடன் காலி முகத்திடலில் நின்றிருந்த மேலும் இரு இளைஞர்கள் மேற்படி இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களினால் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் பின்னர் அவர்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இரு மாணவிகளையும் அழைத்துச் சென்று லொட்ஜில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லொட்ஜிலிருந்து மீட்கப்பட்ட இரு மாணவியரும் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கும் வரை பெண் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 வயதுடைய இவ்விரு மாணவிகளும் இரு இளைஞர்களுடன் காதல் தொடர்பினைக் கொண்டிருந்துள்ளதுடன், பாடசாலை அதிபருக்கு விடயம் தெரிய வந்ததையடுத்து அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இவ்விரு மாணவிகளும் பாடசாலை முடிவடைந்ததன் பின்னர் கொழும்பு வந்துள்ள நிலையிலேயே மேற்படி கான்ஸ்டபிள்களிடம் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவ தினம் மாலை ஆறு மணியளவில் மேற்படி கான்ஸ்டபிள்களினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ள இவ்விருவரும் இரவு 11 மணியளவிலேயே லொட்ஜிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஒரு மாணவி சிலாபத்தில் உள்ள தனது உறவினர் ஒருவருக்கு தாம் கொழும்பில் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவிகள் லொட்ஜில் தங்க வைக்கப்பட்டிருக்கும் விடயம் வெளியில் கசிந்ததை அடுத்து கலவரமடைந்த சந்தேக நபர்களில் ஒருவர் இரு மாணவிகளையும் மறுநாள் அழைத்துக் கொண்டு சிலாபம் பொலிஸ் நிலையம் வந்துள்ளார்.
இதனையடுத்து மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே மேற்படி கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேக நபரிடம் குறித்த மாணவிகள் இருவரும் லொட்ஜில் தங்க வைக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை அறிவதற்காக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு விஷேட குற்றவிசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
2 hours ago
xlntgson 0776994341;0716597735 sms only Tuesday, 14 June 2011 09:06 PM
காணவில்லை:
பாடசாலைப் பிள்ளைகள் பாடசாலை நேரத்தில் பாடசாலையில் இல்லாவிட்டால் எங்கு போனார்கள் என்று இனிமேல் பொலிஸில் சென்று கேட்க வேண்டியதில்லை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago