2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் இரண்டாம் கட்ட புனரமைப்பு ஆரம்பம்

Super User   / 2011 ஜூன் 25 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் இரண்டாம் கட்ட புனரமைப்பு  பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுரைச்சோலைப் பிரதேசத்தில் அனல் மின்சாரம் அமைக்கப்பட்டுவதனால் பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் மாம்புரி வரையான வீதி காபட் வீதியாகப் புனரமைக்கப்பட்டது.

ஆனால், வீதியின் ஏனைய பகுதி புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக  காணப்பட்டது. இதனால் நுரைச்சோலை, நரக்களி, கற்பிட்டி, உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் போக்குவரத்து செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

எனினும் தற்போது மாம்புரியிலிருந்து பாலக்குடா வரைக்குமான வீதி காபட் வீதியாக புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X