2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் மாவட்ட செயலகத்துக்கு தகவல் தொடர்பாடல் பிரிவு

Menaka Mookandi   / 2011 ஜூலை 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
 
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மஹிந்த செனவிரத்ன தலைமையில் தகவல் தொடர்பாடல் பிரிவொன்று இன்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை அதிகாரியாக அநுராதபுரம் கிழக்கு நுவரகம் பிரதேச செயலாளர் சமன் பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 23 பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் ஒவ்வொரு இணைப்பதிகாரிகளை புதிதாக நியமித்து அவர்கள் ஊடாக தேசத்திற்கு மகுடம் கண்காட்சியுடன் தொடர்புடைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்காகவே இத்தொடர்பாடல் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒயாமடுவ பகுதி அபிவிருத்திக்கான சகல கணக்கெடுப்புகளும் நிறைவு பெற்றுள்ளது. தற்போது வீப்தி அபிவிருத்தி மற்றும் அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல் தொடர்பான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வடமத்திய மாகாண சபை மற்றும் மத்திய அரசின் கிழுள்ள திணைக்களங்கள், அமைப்புகள், சபைகள் உட்பட சகல நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான ஆரம்பகட்ட அபிவிருத்தி; வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
பிரதேச செயலாளர் காரியாலயங்களினூடாக மேற்கொள்ளப்படவுள்ள வாராந்த அபிவிருத்திப் பணிகளில் பயிற்சி வேலைத் திட்டங்கள், மேற்பார்வை நடவடிக்கைகள், தகவல் சேகரித்தல், பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவைகளை நடத்துதல் போன்ற செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X