2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கத்திக் குத்துக்கு இலக்காகி ஒரு பிள்ளையின் தந்தை பலி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 20 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

கத்திக் குத்துக்கு இலக்காகி ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று மாராவில பொலிஸ் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

நாத்தாண்டி தப்போவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சுஜித் நிலந்த என்பவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானவர் ஆவார்.

கத்திக் குத்துக்கு இலக்கான மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார்.

கத்தி குத்தை மேற்கொண்டுவிட்டு தப்பியோட முயன்றதாகச் தெரிவிக்கப்படும் சந்தேக நபரான பெண் மாராவில பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு வீட்டில் வைத்து கத்திக் குத்தை மேற்கொண்ட பெண்ணுக்கும் இவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அப்பெண் மேற்படி நபரை கத்தியால் குத்தியதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மாராவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாராவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X