Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்சாத் றஹ்மத்துல்லா, எம்.என்.எம். ஹிஜாஸ்,ஜெஸீரா))
புத்தளம், கற்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து, கடற்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கற்பிட்டி பிரதேசத்தில் நேற்று ஒரு நபரினால் பெண் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அதனை தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட பிரதேச மக்களினை சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரினை பிடித்து கட்டி வைத்து தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை தாக்கப்பட்டவர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கற்பிட்டி நகரில் கூடிய பொது மக்கள் அந்த அந்நபரின் செயற்பாட்டை கண்டித்து, அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தியதால் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையினை அடுத்து பொலிஸ் உயரதிகாரிகள் , கற்பிட்டிக்குச் சென்று கற்பிட்டி நகரிலுள்ள பள்ளியில் அமைதியினை எற்படுத்தும் நோக்கத்தில் மக்களுடன் கலந்துரையாடினர். கற்பிட்டி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலையீட்டால், நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் இரவு வேளைகளில் கற்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸாரினால் உறுதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில்இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்காக புத்தளத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, புத்தளம், ரத்மல்யாய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சந்தேகதிற்கிடமானவர்கள் நடமாடுவதாக கூறப்பட்டதையடுத்து அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள், கிராமத்தினை சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுப்பட்ட போதும் சந்தேக நபர்கள் எவரும் பிடிபடவில்லை.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025