Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
கற்பிட்டி பிரதேசத்தில் மர்ம மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர், நேற்று மாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை தாக்கியதான சந்தேகத்தின் பேரில் பொது மக்களால் தாக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளாரென சிலாபம் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்துள்ள மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள், அங்கிருந்த பெண்ணை தாக்கினார் என்ற குற்றச்சாட்டை அடுத்து பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டார்.
இந்நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் மீது, வைத்தியசாலைக்குள் புகுந்த பொதுமக்கள் அவர் மீது மீண்டும் தாக்குதல் நட்தினர். அத்துடன் கற்பிட்டி வைத்தியசாலை சொத்துக்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து மேற்படி சந்தேகநபர் மேலதிக சிகிச்சைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார் என வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கற்பிட்டி வைத்தியசாலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேற்படி வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டமும் இன்று காலையுடன் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்:
7 hours ago
19 Jul 2025
sursh Sunday, 21 August 2011 07:10 PM
இதன் பின்னால் ஏதோ ஒரு பெரிய சக்தி இருப்பதாக உணர முடிகின்றது .அரசு ஏன் இதனை கண்டிக்க மறுக்கிகின்றது?
Reply : 0 0
Riyas Sunday, 21 August 2011 07:18 PM
ஆஹா... அடிக்கடி அவங்கதான்னு நிருபிக்கிறாங்கப்பா...
Reply : 0 0
naleem Sunday, 21 August 2011 07:42 PM
என்ன நடக்கிறது இங்க? எல்லாம் அவர்களின் ஆட்சி! ஒருநாள் அகப்படுவான்! அன்று நாங்கள் சந்திப்போம்.
Reply : 0 0
Yaseenbawa hussain,pottuvil Sunday, 21 August 2011 11:37 PM
நம்பமாட்டாங்க மக்களை முட்டாள் என்று சொல்ல இவங்க என்ன லாயக்கோ முகத்திரை கிழியாதோ இனியும்?
Reply : 0 0
bava Monday, 22 August 2011 02:05 PM
பாம்பை சீண்டினால் கொத்தும் அது மாதிரி மக்களை சீன்டாதே.
Reply : 0 0
Ramzan Monday, 22 August 2011 04:50 PM
பொலிஸின்ட பலத்த பாதுகாப்பு இதுதாதானா, இவிய தாதானா அப்ப பொதுமக்கள பாதுகாக்குற படை. இனி பொலிஸிக்கு பாதுகாப்பு தேவை என்டால் பொதுமக்களிடம் கேளுங்கோ,
Reply : 0 0
raja Tuesday, 23 August 2011 02:58 AM
veli pairai meihirathe Iyyo.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025