2025 ஜூலை 19, சனிக்கிழமை

புத்தளத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்,மும்தாஜ்,இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையினையடுத்து, அப்பகுதியின் பாதுகாப்பினை இராணுவம்  பொறுப்பேற்றுள்ளதாக புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் பிரிகேடியர் கமகே தெரிவித்தார்.

மக்களை அமைதியாக வீடுகளுக்குச் சென்று வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பெரிய பள்ளிவாசல் நிர்வாகசபையினாலும் புத்தளம் நகரசபைத் தலைவர் உட்பட அரசியல்வாதிகளினாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைகலப்பு ஏற்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதுடன், பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X