2025 ஜூலை 19, சனிக்கிழமை

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Super User   / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம், முகுனுவட்டவான் சிப்பிகலான பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிப்பிகலான பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 40 வயது நோட் பெரேரா என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் பலியானவராவார். நேற்றிரவு 10 மணியளவில் இறந்த நபரின்  வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவத்தின் போது சூட்டுக்காயங்களுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.மணல் வியாபாரம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X