2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ரூ.80 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் இந்தியாவிலிருந்து கடத்தல்

Menaka Mookandi   / 2011 ஜூன் 07 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள கற்பிட்டி கடற்படையினர் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி கடற்பரப்பை நோக்கி வந்துகொண்டிருந்த இயந்திரப்படகொன்றை சோதனையிட்ட கடற்படையினர் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கடலட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 20 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கடலட்டைகளின் பெறுமதி 80 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளையும், இயந்திரப்படகில் வந்த மூவரையும் கற்பிட்டி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X