2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உயர் மட்ட கலந்துரையாடல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று, நேற்று  (28) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. 

குறித்த விசேட கலந்துரையாடலில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள், கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சின் அதிகாரிகள், மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் உட்பட ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

இதன்போது, தலைமன்னார் தொடக்கம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி வரையும், விடத்தல் தீவு தொடக்கம் மடு வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதற்கும், குறிப்பாக மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினர் தங்குவதற்கு சுமார் 400 அறைகளை உள்ளடக்கிய திட்டங்களை மேற்கொள்ளுவதற்கும் திட்டமிடப்பட்டது. 

மேலும், சுற்றுலாத்துறையினரின் பொழுது போக்கு, பறவைகள் சரணாலையமாக வர்த்தமானி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள இடங்களில், வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பறவைகளை சுற்றுலாத்துறையினர் பார்வையிடுவதற்கான அழகான பிரதேசங்கள் உள்ளன. இந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் பல வகையான அபிவிருத்திகளை சுற்றுலாத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளுவதற்குத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, மாவட்டத்தில் தொழில் வய்ப்புக்களையும் மேம்படுத்தவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X