Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்குமாறு, 720 வரையான குடும்பங்கள், பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி. பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரவுகளிலும் 43,720க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள நிலையில், மேற்படி நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 720 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்காக, தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
அதாவது, கரைச்சி பிரதேசத்தில் 125 குடும்பங்களும் கண்டாவளை பிரதேசத்தில் 16 குடும்பங்களும் பூநகரி பிரதேசத்தில் 346 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 233 குடும்பங்களும் என 720 குடும்பங்களைச் சேர்ந்த 2,509 பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி, தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட இரணைதீவு விடுவிக்கப்படாமை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் வெடி பொருள் அகற்றுவதில் உள்ள தாமதம் என்பவற்றால், அதிகளவான குடும்பங்களும், மேலும், படையினர் வசமுள்ள காணிகளால் குறிப்பிட்ட சில குடும்பங்களும் மீள்குடியேறமுடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
19 Jul 2025