2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் 30 முறைப்பாடுகள்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சா. கர்ணன் இன்று தெரிவித்தார்.

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது வவுனியா பிரதேசத்தில் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும் அது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் தொடர்பிலும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் விபரம் கோரப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை காணி சுவீகரிப்பு உத்தியோகத்தருக்கு தாம் மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் இதுவரை வவுனியா மாவட்டத்தில் பல தனியார் மற்றும் அரச காணிகள் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தவகையில் வவுனியா நகரில் பொலிஸ் நிலையத்திற்காக 0.25 ஏக்கர் நிலமும் பூங்கா வீதியில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்குரிய இடத்தில் விசேட அதிரடிப்படைக்காக 1.5 ஏக்கர் நிலமும் பட்டானிச்சூர் புளியங்குளத்தில் தனியார் காணி 2 ஏக்கர் இராணுவத்தேவைக்காவும்  மூன்று முறிப்பு கிராம சேவகர் பிரிவில் இராணுவ நலன்புரி நிலையத்திற்காக 0.25 ஏக்கர் நிலமும் இராணுவ மற்றும் விமானப்படையின் தலைமைப்பீடத்திற்காக 240 ஏக்கரும் மேலுமொரு படைப்பரிவுக்காக 38 ஏக்கர் காணியுமாக தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்காக 28 ஏக்கர் நிலமும் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணியில் சிலருக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. சிலர் அதனை பெறவில்லை எனவும் உதவி பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, வவுனியா நகர் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கலாசார மண்டபம் இராணுவத்தினரால் ஆட்சிப்படுத்தப்பட்டள்ளது. இதன் நிலப்பரப்பு 0.5 ஏக்கர் ஆகும். இத்துடுன் பேயாடிகூழாங்குளத்தில் 56 ஆவது படையணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 20.5 ஏக்கராகும்.
மகாரம்பைக்குளம் கிராம சேவகர் பிரிவில் பொலிஸ் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 6 ஏக்கராகும்.

காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் விஜயபாகு ரெஜிமென்டுக்காக 4 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இவற்றை செவிமடுத்த அபிவிருத்தி குழுவின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட மட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு உத்திரவிட்டிருந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X