2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

குளங்கள், வாய்க்கால்களை புனரமைக்க 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்களை புனரமைப்பதற்கு  அரசாங்கம் 50 மில்லியன் ரூபாயினை வழங்கியிருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் விவசாய செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு மேற்படி தொகை ஜனாதிபதியினால் விசேடமாக வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பரிய தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் விவசாய செய்கைக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறுகுளங்கள் மற்றும் வாய்க்கால்கள் என்பவற்றின் புனரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் மாவட்டத்தின் விவசாய செய்கையினை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி, மாவட்டச் செயலகத்திற்கு சுமார் 50 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியிருப்பதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பரிய மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X