2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மாட்டிறைச்சி விற்பனைக்கு 10 தினங்களுக்குள் அனுமதி

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாட்டு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர் வரும் 10 தினங்களுக்குள் மன்னார் மாவட்டத்தில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய அனுமதி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்  மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை செய்ய
ப்பட்டுள்ளது.மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோயின் காரணமாகவே   மாடு வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கால்நடை வைத்திய அதிகாரியினாலேயே குறித்த தடை அமுல்படுத்தப்பட்டது.

நாட்டில் பல இடங்களில் மாடு வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால் குறித்த தடை பல மாவட்டங்களில் நீக்கப்பட்டு மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றது.ஆனால் மன்னாரில் இது வரை தடை நீக்கப்படவில்லை.

உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மாட்டு இறைச்சி விற்பனை நிலைங்களை ஏலம் எடுத்தவர்களும் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஏனைய மாவட்டங்களை விடவும் மன்னார் மாவட்டத்தில் உள்ளவர்கள் மாட்டு இறைச்சியை அதிகம் விரும்பி உண்பவர்களாக உள்ளனர்.

இதனால் இத்தடை பாரிய பிரச்சினையாக மன்னார் நகர சபைக்கும்,பிரதேச சபைகளுக்கும் உள்ளது. தற்போது மாடு வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் சட்ட விரோதமான முறையில் மாடு வெட்டப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தடையை நீக்குவது தொடர்பில் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபையினர் உரிய அதிகாரிகளுடனும் கலந்துடையாடியுள்ளோம்.

குறிப்பாக கடந்த 6 ஆம் திகதி  வடமாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களை மன்னார் நகர சபை, பிரதேச சபைகளின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினோம்.

இது தொடர்பாக அமைச்சர் கால்நடைகள் அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சினை குறித்து வினவினார். இதன் போது குறிப்பிட்ட தினங்களுக்குள் இந்த நோயை கட்டுப்படுத்தி எதிர்வரும் 10 தினங்களுக்குள் மன்னார் மாவட்டத்தில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளர்.

இதே வேளை நோய் அற்ற மாடுகளை வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து வெட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும்,மன்னார் மாவட்டத்தில் மாட்டிஇறைச்சி தடை செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் மக்களுக்கு விழிர்ப்புனர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X