2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிணற்றிலிருந்து இதுவரை 14 கிளைமோர்கள் மீட்பு

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள கிணற்றிலிருந்து வெள்ளிக்கிழமை (16) மேலும் 13 கிளைமோர் குண்டுகளும் 1 இயக்கும் ஆளியும் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிணற்றினை கடந்த மாதம் 15 ஆம் திகதி பொதுமக்கள் துப்புரவு செய்த போது, ஒரு கிளைமோர் குண்டு மீட்கப்பட்டதுடன், துப்புரவு பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த கிணற்றிற்குப் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை (16) கிணற்றின் துப்பரவு பணியினை இராணுவத்தினர் மேற்கொண்ட போது, அதனுள் இருந்து 750 கிராம் நிறையுடைய 10 கிளைமோர் குண்டுகளும், 1500 கிராம் நிறையுடைய 3 கிளைமோர்களுமாக மொத்தம் 13 கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கிளைமோர் குண்டுகள் பாவிக்க முடியாத அளவிற்கு செயலிழந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X