2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆணைக்குழு முன்பாக 29பேர் சாட்சியமளிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 06 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனோர் தொடர்பில் காணாமாற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் 29பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக பிரிவில் சாட்சியமளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (05) முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றய தினம் 60பேர் அழைக்கப்பட்டு அதில் 25பேர் சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து, இன்று (06) தொடர்ந்த சாட்சியமளிக்கும் நிகழ்விற்கு 61பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 29பேர் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்தனர். இன்று மேலும் 85பேர் புதிதாகப் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்களில் சாட்சியமளிக்க முடியாமற் போனோர் மற்றும் புதிதாகச் சாட்சியமளிக்க பதிவு செய்தோருக்கான சாட்சியமளிக்கும் ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கொழும்பு சென்று முடிவெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அறிவிப்பதாக ஆணைக்குழு தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X