2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பால் வருமானம் ரூ.50 இலட்சம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 20 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், பால் விற்பனை மூலம் கடந்த ஜுன் மாதம் 50 இலட்சம் ரூபா வருமானத்தினை ஈட்டியுள்ளதாக கண்டாவளைப் பிரதேச கால்நடை வைத்தியதிகாரி இன்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

கண்டாவளைப் பிரதேசத்தில் பிரதான வாழ்வாதார நடவடிக்கையாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், இணையாக கால்நடைப் பண்ணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், பகுதி நேரமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவர்களும் காணப்படுகின்றனர். அந்தவகையில், கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலை விற்பனை செய்வதன் மூலம் மேற்குறித்த தொகை வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கண்டாவளைப் பிரதேசத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம் 50 வீத மானிய அடிப்படையில், 48 பேருக்கு தலா 10 கோழிக்குஞ்சுகளும், 5 பேருக்கு தலா ஒவ்வொரு ஆடும், 3 பேருக்கு தலா ஒவ்வொரு நல்லின காளை மாடும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மத்திய அரசின் நிதியில் 20 பேருக்கு தலா 10 கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X