2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கால்வாய் நோயை கட்டுப்படுத்த 04 வாரங்கள் தேவை

Suganthini Ratnam   / 2014 மே 13 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கால்வாய் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு  இன்னும் 04 வார காலம் தேவைப்படுமென கால்நடை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் பல பாகங்களிலும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கால்வாய் நோய் தாக்கம், மன்னாரிலும் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் மாதம் 13ஆம் திகதி மடுப் பிரதேசத்தில் முதலில் கால்வாய் நோய் இனங்காணப்பட்டதை அடுத்து, மன்னார் மாவட்டத்தில்; மாடுகளை  வெட்டுவதற்கும்  மாட்டிறைச்சிப் பயன்பாட்டிற்கும் சுமார் 02 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல்  மன்னார் மாவட்டச் செயலகத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் திங்கட்கிழமை (12) நடைபெற்றது.

கால்வாய்  நோயால்  சுமார் 1,000 கால்நடைகள் மன்னாரில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சில இறந்துள்ளதாகவும் கால்நடை வைத்தியர்கள் கூறினர்.

இதன்போது, கால்வாய் நோய் தாக்கம் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமெல், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மன்னார் அலுவலக வைத்திய அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், கால்நடை வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X