2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரைச்சியில் 13 பேருக்கு சிறுநீரகக் கொடுப்பனவு

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சிக் கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில் 13 சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் 500 ரூபா சிறுநீரகக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் வியாழக்கிழமை (05) தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி திட்டமானது வடமாகாணத்தில் மட்டும் நடைமுறையிலுள்ளது. வேறு மாகாணங்களில் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற ரீதியில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான நிதியினை வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் வழங்கி வருகின்றது.

கடந்த மே மாதம் வரையில் 12 பேருக்கு வழங்கப்பட்டு வந்த இந்தக் கொடுப்பனவு இம்மாதத்திலிருந்து மேலும் ஒருவர் இணைக்கப்பட்டு 13 பேருக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த சிறுநீரக நோய் உதவிப் பணத்தை பெற விரும்பும் ஒருவர், அரசாங்க மருத்துவமனையில் பரிசோதித்து அறிக்கையினைப் பெற்று கிராமஅலுவலரின் சிபாரிசு பெற்ற கோரிக்கை கடிதத்துடன் பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X