2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புளொட்டின் 25 ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று(13) முதல் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 25 ஆவது வீரமக்கள் தினம்  அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் நினைவாக ஞாயிற்றுக்கிழமை(13) உமாமகேஸ்வரன் இல்லத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும்,  புதன்கிழமை(16) மாலை 3.30 மணிக்கு எமது கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரனின்; நினைவு தினமான வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

மறைந்த எமது தோழர்கள், போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக்   கழகத்தின் சார்பில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கோரியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X