2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

29 இந்திய மீனவர்களும் விடுதலை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட  29  இந்திய மீனவர்களும்   மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதன்கிழமை (04)  விடுதலை செய்யப்பட்டனர்.

மேற்படி கடற்பரப்பில் 07 படகுகளுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற  குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும் சனிக்கிழமை (31)  கடற்படையினர் கைதுசெய்தனர்.

இவர்களை  மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (01) ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து,  மன்னார் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (02) ஆஜர்படுத்தப்பட்ட 29 மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்  நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  29 மீனவர்களையும்  விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார்.  இதற்கமைய,  மன்னார்   நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட  29 மீனவர்களையும்  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் விடுதலை செய்தார்.

இதற்கிடையில், இம்மீனவர்கள் இந்திய தூதுவராலயத்தின் அதிகாரிகளுடாக அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜுலை மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும்; மன்னார் கடற்றொழில் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலையான மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X