2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வலுவிழந்த 6 பேருக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன் 

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வலுவிழந்த 06 பேர் சுயதொழில் மேற்கொள்வதற்காக, சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனமுற்றோர் தேசிய செயலகத்தால் நன்கொடையாக  அனுப்பப்பட்ட 140,000 ரூபா திங்கட்கிழமை (09) பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக  கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் வியாழக்கிழமை (05)  தெரிவித்தார்.

இவர்களில் 04 பேருக்கு தலா 25,000 ரூபா படியும் 02 பேருக்கு தலா 20,000  ரூபா படியும்  வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறே சுயதொழில் நன்கொடை நிதி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 07 பேருக்கு தலா 25,000 ரூபா படி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கரைச்சி பிரதேச செயலகத்தில் 1,616 பேர் வலுவிழந்தோர் இருப்பதுடன், இவர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X