2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 7,534 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 5,646 கைம்பெண்களும் கணவனால் கைவிடப்பட்ட  1,888 பெண்களுமாக  7,534 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார்.

இந்நிலையில்,  பல உதவித் திட்டங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு  முன்னுரிமை கொடுத்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திட்டத்தின் கீழான உதவிகள், சமுர்த்தி சுயதொழில் கடனுதவிகள், தொழிற்றுறை உபகரணங்கள் வழங்குதல், வீட்டுத்திட்ட உதவிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடான உதவிகள் ஆகியவற்றில்  முன்னுரிமை அளிக்கப்பட்டு இக்குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன.

வாழ்க்கைத் துணையின்றி, தங்களது குடும்பங்களை  நடத்துவதில் சிரமப்படும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கே உதவித் திட்டங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X