2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

11 பாடசாலைகளுக்கு குடிநீர் விநியோகம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கல்விக் கோட்டப் பிரிவிற்குட்பட்ட 11 பாடசாலைகளுக்கு நாளாந்தம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கண்டாவளைக் கோட்டக் கல்வி அதிகாரி வி.இராஜகுலசிங்கம் இன்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் 24 பாடசாலைகள் இருக்கின்ற நிலையில், அவற்றில் குடிநீர்த் தேவையுள்ள 11 பாடசாலைகளுக்கு நாளாந்தம் 6,500 லீற்றர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் குடிநீர் வழங்கும் நடவடிக்கையிலேயே மேற்படி 11 பாடசாலைகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X