2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

11ஆவது தடவையாக பாடசாலையில் திருட்டு

Kogilavani   / 2014 மே 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சு.பாஸ்கரன்


கிளிநொச்சி முரசுமோட்டை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் அலுவலகம் 11ஆவது தடவையாக உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக  பாடசாலை நிர்வாகம் வியாழக்கிழமை (22) தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டிருந்த உலர் உணவு பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலை வழமை போன்று வியாழக்கிழமை (22) காலை திறந்த பொழுது அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரிவந்துள்ளது. 

இது தொடர்பாக பாடசாலை நிர்வாகம் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பார்வையிட்டதுடன் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்பிரதேசம் 2010 மீள் குடியேற்றம் செய்யப்பட்டதுடன் 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 11 தடவைகள் இப்பாடசாலையில் பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.                
                                                    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X