2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அனர்த்த அபாய குறைப்பு தொடர்பில் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நகரத்தை திடீர் அனர்த்தங்களிலிருந்து  பாதுகாத்தல், அனர்த்தங்களிலிருந்து தாக்குப்பிடிக்கக்கூடிய நகரமாக மற்றுவதற்கான அனர்த்த ஆபாய குறைப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை  கருத்தரங்கு நடத்தப்பட்டது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள வடமாகாண ஆங்கில உதவி மையத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கை மன்னார் வலயக் கல்விப் பணிமனையும்  அனர்த்த முகாமைத்துவ நிலையமும்  இணைந்து நடத்தியது.

இக்கருத்தரங்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ், மன்னார் வலயக் கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டயஸ் பிரீஸ், வடமாகாண ஆங்கில பயிற்சி மையத்தின் நிலைய முகாமையாளர் எஸ்.ஏ.ராஜா,  பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X