2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வைகறையில் சிகிச்சை பெற விரும்புவோர் சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொள்ளவும்

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, பம்பைமடுவில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு இல்லமான வைகறையில் சிகிச்சை பெற  விரும்புவோர் அந்தந்தப் பகுதி  சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொள்ளுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகரும் வைகறையின் பொறுப்பதிகாரியுமான வைத்திய கலாநிதி கே.அகிலேந்திரன் தெரிவித்தார்.

வடமாகாணசபையின் சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் செயற்படும் வைகறையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வடபகுதியில் மேலும் பலர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு பராமரிக்கமுடியாத நிலையில் உள்ளனர் என அறியப்படுகின்றது.

இவர்கள் வைகறையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு வசிதிகள் செய்து கொடுக்கப்படும்; என்பதால், தாம் வசிக்கும் பகுதி சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசில் எம்முடன் தொடர்புகொள்ளும் பட்சத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களை ஏற்றிவந்து பராமரிப்பதற்கு தாம் தயாராக உள்ளதாகவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X