2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உளவள டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன் 


சமூக சேவைகள் அமைச்சின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் உளவள டிப்ளோமா கற்கைநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

தேசிய சமூக அபிவிருத்தி கற்கைகள் நிறுவக பணிப்பாளர் றிட்லி ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற  அங்குரார்ப்பண நிகழ்வில், முதன்மை விருந்தினராக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் கலந்துகொண்டார்.

பல்கலைக்கழக பட்டத்திற்கு சமமான இந்த டிப்ளோமா கற்கையின் வடமாகாண நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலக கட்டிடத்தொகுதியில் அமையப்பெற்றுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சின் உளவள அதிகாரிகள், சமூக சேவைகள் அதிகாரிகள், ஏனைய வெளிக்கள அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோருக்காக இந்தக் கற்கைநெறி நடத்தப்படவுள்ளது.

2 வருடங்களைக் கொண்ட இந்தக் கற்கைநெறியை தொடர்வதற்கு வடமாகாணத்தைச் சேர்ந்த 84 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேருக்கான கற்கைநெறிக் கட்டணத்தை வேள்ட்விஷன் மற்றும் யுனிசெவ் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளன.

இலங்கையில் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்வாண்மையுடன் சமூகப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கில்; தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

இந்நிறுவனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பட்டங்களை வழங்குவதற்குரிய உயர் கல்வி நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், சமூகப் பணித்துறையில் இளமாணி மற்றும் முதுமாணி கற்கைநெறியை போதித்து பட்டங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X