2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நல்லிணக்க செயலமர்வு

Kanagaraj   / 2014 மே 12 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனுசரணையில் சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு செயலமர்வு இன்று திங்கட்கிழமை(12) கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய சமூக அமைச்சினால் மக்களிடத்தே செயற்படுத்தக்கூடிய நல்லிணக்க விடயங்கள் குறித்து இந்தச் செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திட்டப் பணிப்பாளர் ச.மோகனபவன் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில், சமூக சேவைகள் அமைச்சின் உளவள ஆலோசகர் எம்.எச்.எம்.அஸ்கர்  கிளிநொச்சி  மாவட்ட செயலக உளவள அலுவலர் தே.துஸ்யந்தன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.

சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த சமூக சேவைகள் பிரிவின் வெளிக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X